டெசின் அகாடமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் யின் ஓவிய கலை கண்காட்சி .
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஐ ஓ ஏ காம்ப்ளக்ஸ்இல் டெசின் அகாடமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் யின் ஓவிய கலை கண்காட்சி நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் சுதா ராஜேந்திரன் முன்னிலையில், மூத்த கலைஞர் அகஸ்டின் துவக்கி வைத்தார், 8ம் தேதி இன்று துவங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர் மாணவிகள் இலவசமாக பார்ப்பதற்கான அனுமதியானது வழங்கப்பட்டிருக்கிறது, கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள், வலையில் சிக்கி இருக்கும் மீன், ஆலமரம் போன்றவள் பெண் என்பதை உணர்த்தும் ஓவியங்கள், சிவன் அம்மன், உள்ளிட்ட தத்ரூப ஓவியங்கள் அகாடமியில் உள்ள மாணவர்கள் 15 க்கும் மேற்பட்டோர் வரைந்த இந்த ஓவியங்கள் விற்பனை மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓவிய கண்காட்சியின் நோக்கம் ஓவியம் வரைதலின் நோக்கத்தையும் ஒருவருடைய தனித் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையை தூண்டுவதற்காகவும் சமூகத்தில் பார்க்க இருக்கும் நல்ல நிகழ்வுகளை மனதில் பதியும் அந்த நிகழ்வுகளை ஓவியத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவதற்காக இந்த கண்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது.