ஈரோடில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
![]()
ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள செல்போன் கடையில் நேற்றிரவு ரூ.15 லட்சம் மதிப்புள்ள 150 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை கடை உரிமையாளர்கள் தரணிதரன் மற்றும் பூபதி ஆகியோர் கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் கடையினுள் சென்ற பொழுது கடையில் இருந்த புது மாடல் செல்போன்கள் அனைத்தும் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. கடையின் உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மூலம் விசாரணை மேற்கொண்டனர், ஈரோடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடுவதற்கு ஒருவர் கடையின் உள்ளே செல்வதற்கு பூட்டை உடைக்கும் காட்சியும் பதிவாகி இருந்தது முதல் கட்ட விசாரணையில் சிசிடிவி கேமராவை வைத்து டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

