வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்.
திருவள்ளூர் டிச 08 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் – 2023 தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் பார்வையாளரும் தொழிலாளர் ஆணையர், அரசு முதன்மை செயலாளருமான அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 01.01.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் கடந்த 09.11.2022 முதல் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக, 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தினங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குசாவடிகளிலும் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக தங்கள் பகுதியிலுள்ள நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் வழங்கலாம்.மேலும், NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற App மூலமாக விண்ணப்பிக்கலாம்.மேலும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்ததில் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் அறிவுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொ) பரமேஸ்வரி, திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹர்ஷத் பேகம், அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கே.பிரவீனா குமாரி, உதவி ஆணையர் (8 வது மண்டலம் அம்பத்தூர்) எஸ்.ராஜேஸ்வரி, உதவி ஆணையர் (1வது மண்டலம், திருவொற்றியூர்) சங்கரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.