ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்”ரூபிக்ஸ் கியூப்”பில் புதிய சாதனை நிகழ்த்தி அசத்திய அக்கா- தம்பி.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மாளிகையில் நடைபெற்ற ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்”ரூபிக்ஸ் கியூப்” சாதனை நிகழ்வில் மக்கள் மருத்துவர் தெய்வதிரு.டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் பேரன், பேத்தியான அன்விதா கார்த்திக்,அனிருத் சாய் கார்த்திக் ஆகியோரின்
ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்”ரூபிக்ஸ் கியூப்”உலக சாதனையை நிகழ்த்தும் நிகழ்ச்சி டாக்டர் வேணி ஜெயசந்திரன்,டாக்டர் சரண்யா,டாக்டர் கார்த்திக்,டாக்டர் சரவணன்,டாக்டர் சரத் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களா ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம் இரா.மூர்த்தி,புருஷோத்தமன்,பாலா ஜி மருத்துவமணையின் இயக்குணர் டாக்டர் பாலாஜி,பேராசிரியர் டாக்டர் குமுதா,டாக்டர் ஏ.ஜி நர்த்தனா,ராயபுரம் உதவி ஆணையாளர் லக்ஷ்மனன்,க்யூப் பயிற்ச்சியாளர் இளைராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் சிறுமி அன்விதா கார்த்திக் தனது சாதனை நிகழ்வை தொடங்கி புதுவித சாதனை முயற்சியாக கலைத்து கொடுக்கபட்ட ரூபிக்ஸ் க்யூப்கலை தலையில் கரகம் வைத்து கொண்டே கைகளில் “ரூபிக்ஸ் க்யூப்”களை சரியாக ஒன்று சேர்த்து 30 நிமிடங்களில் 28 “ரூபிக்ஸ் கியூப்”களை நிறைவு செய்து புதிய ஏசியா புக் ஆப் ரெக்கார்டு சாதனையை நிகழ்த்தினார்.இந்நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.பார்வையாளர்கள் கரகோஷாத்துடன் அவரைத் தொடர்ந்து உற்சாகத்துடன் அனிருத் கார்த்திக் கலைத்து கொடுக்கபட்ட பிரமிட் “ரூபிக்ஸ் கியூப்”
களை 30 நிமிடங்களில் 3க்கு3,2க்கு2,(7)செட்டுகளை சேர்த்து புதிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் நிகழ்ச்சி சார்பில் கலந்து கொண்ட ஜட்ஜ் (ஜுரி) விவேக் கூறுகையில் சிறுவர்கள் அன்விதா கார்த்திக், அனிரூத் கார்த்திக், நிகழ்த்தியுள்ள இந்த சாதனையானது இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை என அவர் தெரிவித்தார்.அடுத்தடுத்து கடினமாக கலைத்து கொடுக்கபட்ட “ரூபிக்ஸ் கியூப்”களை விரைவில் ஒன்று சேர்த்து முடித்து சாதனையை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.மேலும் அவர் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் சான்றிதழ்களையும் பரிசு கோப்பைகளையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.