பழங்குடியின மக்களுடன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
கன்னியாகுமரி மாவட்டம் :- வன விலங்குகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் மற்றும் புலிகள் சரணாலயம் என்ற பெயரில் நில வெளியேற்றம் செய்வதை நிறுத்த கூறியும் குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகள் தனியார் காடு சட்டத்தில் நீக்க கூறியும், சூழலில் தாங்கும் மண்டல பகுதிகள் என்பதை மறுவறை செய்ய வலியுறுத்தியும் பழங்குடியின மக்களை ஐந்தாவது அட்டவணை பகுதியில் சேர்க்கும் பழங்குடி பகுதியை ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்ட பகுதியாக அறிவிக்க கூறியும் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் இயங்கும் மத்திய மாநில அரசு துறைகள் கார்ப்பரேட் கம்பெனிகளில் 100% வேலை வாய்ப்புகளை பழங்குடி மக்களை கொண்டு நிரப்ப கூறியும் பழங்குடியின மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிதி பங்கேற்றின் அடிப்படையில் 10 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டி தர கோரியும் 20 அம்ச உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்களுடன் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற நிலையில் கூட்டமாக வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்தனர் இதனால் காவல்துறையினருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்…