அதிமுக OPS சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வடிவேல் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட அவை தலைவர் ஜெ.எஸ.பி. ஸ்ரீ ராமுலு, மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணவேணி, பொதுக்குழு உறுப்பினர் நாகரத்தினம், ஒன்றிய துணைச் செயலாளர் வக்கில் ஸ்ரீதர், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர். வரும் 2026 இல் ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியை அமைய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பொருளாளர் சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்திக், ஒன்றிய இனச் செயலாளர் ஆதிலட்சுமி சாமசிவம், ஒன்றிய பொறுப்பாளர் முன்னாள் அந்தேரிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, சேட்டு சுகன்யா, முருகன், சேகர், கேசவன் ஆகியோர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.