இளம் விஞ்ஞானியாக 16 பேர் தேர்வு‌..‌

Loading

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்,புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மேலாளர் ஆர்.நெப்போலியன் முன்னிலை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான நோக்கம் குறித்து  இரா.இராமதிலகம் பேசினார். ஆய்வுகள் குறித்த கருத்துரையை  எம் எஸ் ஆர் எப் முதுநிலை  விஞ்ஞானி இரா.இராஜ்குமார் வழங்கினார்.  மாநில மாநாட்டிற்கு தேர்வான இளம் விஞ்ஞானிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்டக் கல்வி அலுவலர் சி. சுவாமி முத்தழகன் பேசினார்.
அறிவியல் இயக்க        மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர்  அ.மணவாளன், மாவட்டத் துணைத் தலைவர் க.சதாசிவம், நேரு இளையோர் திட்ட அலுவலர் ஆர்.நமச்சிவாயம், பொருளாளர் த.விமலா, மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.பிச்சைமுத்து, மஸ்தான், சிவானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கந்தர்வக்கோட்டை அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, ஆவுடையார் கோயில் வட்டாரத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மாணவ மாணவிகள் 160 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இதிலிருந்து சிறந்த 16 ஆய்வுக்கட்டுரைகள் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
அவைகள்
அரசு மேல்நிலைப்பள்ளி கிள்ளுக்கோட்டை,
அரசு மேல்நிலைப்பள்ளி ஏம்பல்,
ஸ்ரீ பிரகதாம்பாள்  அரசு மேல்நிலைப் பள்ளி புதுக்கோட்டை,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மீனம்பட்டி,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆவுடையார்கோவில்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
காட்டுநாவல்,
அரசு மேல்நிலைப் பள்ளி அண்டக்குளம்,
அரசு உயர்நிலைப் பள்ளி மேலூர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆவணத்தான்கோட்டை மேற்கு
அரசு உயர்நிலைப் பள்ளி மிரட்டுநிலை,
அரசு உயர்நிலைப் பள்ளி நற்பவளசெங்கமாரி,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேல்மங்கலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அக்கச்சிப்பட்டி,
நகராட்சி நடுநிலைப் பள்ளி
சந்தைப்பேட்டை, புதுக்கோட்டை,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அண்ணாமலையான் குடியிருப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வேதியன்குடி ஆகிய பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
 நிறைவாக சி.ஷோபா நன்றியுரை கூறினார்.
அ.ரகமதுல்லா
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்).
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
அக்கச்சிப்பட்டி.
மாவட்ட செய்தித்தொடர்பாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *