போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (46) சுமார் 14 வருடமாக நாகர்கோவிலில் போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் கைமுறிவு ஏற்பட்டதால் கனரக வாகனம் ஓட்ட முடியாத சூழ்நிலையில் பணிமனையில் உள்ள அதிகாரிகள் கார்களை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பணிமனை அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் கொடுத்தால் கார் ஓட்ட அனுமதிக்கலாம் என்று கூறுவதாகவும் இல்லையென்றால் குலத்தொழில் செய்து பிழைத்து கொள் என்று கூறி அவமானப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி பணிமனை முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார். இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக கொடியுடன் வந்தவர், தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர் மேல் தண்ணீரை ஊற்றி மீட்டனர். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது….