சாதனைபடைத்திருக்கும் அப்போலோ புரொட்டான் கேன்சர் சென்டர்.

Loading

ஆசியாவில் முதன்முறையாக மோயா  நோய் பாதிப்புள்ள இரட்டை குழந்தைகளுக்கு மூளையில் வெற்றிகரமான பைபாஸ்அப்போலோ புரொட்டான் கேன்சர் சென்டரின் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். ரூபேஷ் குமார் தலைமையிலான மூளை நரம்பியல் துறையின் மருத்துவக் குழு, அசிட்டாசோலமைடு பயன்படுத்தும் ஒரு சிறப்பு தொடர் வரிசையுடன் எம்ஆர்ஐ மூளை உறுப்பு வழி செலுத்தலை பயன்படுத்தி மேலதிக ஆய்வை மேற்கொண்டது. ஸ்ட்ரோக்/பக்கவாத பாதிப்பு நிகழ்வதற்கு மூளையில் இடர்வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காண்பதற்கு இச்சோதனை உதவுகிறது. இந்த இரட்டை குழந்தைகள் இருவருக்கும் இப்பரிசோதனை முடிவுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தன. வலது பக்கத்தைவிட இடது பக்கம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நோய்க்கு உரிய மருந்துகள் இல்லாத காரணத்தால் மூளையில் ஒரு பைபாஸ் அறுவைசிகிச்சை மூலம் அறுவைசிகிச்சை செயல்பாட்டை செய்வதற்கு மருத்துவர்கள் குழு முடிவுசெய்தது. இந்த பைபாஸ் அறுவைசிகிச்சையின் கீழ் தலையின் தோலிலிருந்து இரத்த ஓட்டம் மண்டை ஓட்டு எலும்பின் மீது உருவாக்கப்பட்ட ஒரு ஜன்னல் வழியாக மூளைக்குள் மாற்றி அனுப்பப்படும். பக்கவாத பாதிப்பு ஏற்படும் இடர் இல்லாமல் மூளைக்கு தடங்கலற்ற இரத்த ஓட்டம் நிகழ்வதை இது ஏதுவாக்கும். எனவே, இந்த சிகிச்சை செயல்முறையானது இந்த இரட்டை குழந்தைகளுக்கு மருத்துவ குழுவால் அறிவுறுத்தப்பட்டது. STA-MCA பைபாஸ் என அழைக்கப்படும் இந்த அறுவைசிகிச்சை, அறிகுறிகள் வெளிப்பட்ட குழந்தைக்கு முதலில் செய்யப்பட்டது. இந்த அறுவைசிகிச்சை செயல்முறை ஏறக்குறைய ஐந்து மணிநேரங்கள் வரை நீடித்தது. இரண்டாவது நாளன்று மற்றொரு குழந்தைக்கும் இதே போன்ற பைபாஸ் அறுவைசிகிச்சை  செய்யப்பட்டது.

அறுவைசிகிச்சையை செய்து சாதனைபடைத்திருக்கும் அப்போலோ புரொட்டான் கேன்சர் சென்டர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *