ஷிபௌரா மெஷின் நிறுவனம் உற்பத்தியை இரட்டிப்பாக்க இந்தியாவில் ரூ. 225 கோடி முதலீடு!

Loading

ஜப்பானின் ஷிபௌரா மெஷின் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஷிபௌரா மெஷின் இந்தியா, சர்வதேச அளவில் ஹை-பிரிசிஷென் இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரம், மெஷின் டூல், டை-காஸ்டிங் இயந்திரங்கள், இண்டஸ்ட்ரியல் ரோபோ & நானோ பிராசஸிங் சிஸ்டம் தயாரிக்கும் நிறுவனமாகும்.
புதிதாக மேற்கொள்ளப்படும் முதலீடு மூலம் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தித் திறன் 1,200 இயந்திரங்களிலிருந்து 3,200 ஆக உயரும்.
ஷிபௌரா மெஷின் குழுமத்தின் தலைவர் திரு. ஷிகெடோமோ சகமோடோ (Mr. Shigetomo Sakamoto), இந்த புதிய முதலீட்டுத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடையே பேசுகையில், “உத்திசார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதற்கு எங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. மேலும் எங்களது தயாரிப்புகளின் விற்பனைக்கு ஏற்ற வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தையும் இந்தியாவில் நிலவுகிறது. அனைத்துக்கும் மேலாக இங்கு நிபுணத்துவம் மற்றும் பொறுப்புள்ள மனித வளம் கிடைப்பது முக்கிய காரணியாகும். கடந்த பல ஆண்டுகளாக ஜப்பானில் உள்ள பணியாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பணியாளர்களிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. அதன் விளைவாக எஸ்.எம்.ஐ. தனது உற்பத்தித் திறனில் சிறப்பான வளர்ச்சியை எட்ட முடிந்தது. மிகச் சிறப்பாகவும், மிக விரைவாகவும் செயல்படும் என்றார்…
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *