சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம்
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு திடக்கிழவு மேலாண்மை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இங்கு தினசரி சேகரமாகும் 5 முதல் 10 டன் குப்பையை வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையான கூவம் ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டி வருகின்றனர்.
நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதால் கழிவுப் பொருட்களும் அதிகளவில் சேர்வதால் கூவம் ஆறு முற்றிலும் மறைந்து குப்பைக் கிடங்காக மாறியுள்ளது. அதனால் கணேசபுரம் இளங்கோ அடிகள் தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் அந்த குப்பைக் கழிவுகளிலிருந்து வரும் துர்நாற்றத்தை தாக்குபிடிக்க முடியமால் மிகுந் த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த துர்நாற்றதால் உடல் நலம் பாதிப்பிற்கு உள்ளாகியுள் ளனர்.
இது குறித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டு செல்லும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
அதே நேரத்தில் அந்த கூவம் ஆற்றின் குப்பைக் கழிவுகளை கொட்டி வைத்துள்ள பகுதியில் 100 மாடுகளை தனி நபர் ஒருவர் கட்டி பராமரித்து வருவதாகவும், மாடுகளை கொட்டகை யில் அடைப்பதற்காக புதிதாக கொட்டகை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும்,100 மாடுகளையும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள கூவம் ஆற்றின் அருகில் பராமரித்து வருவதால் சானம், கோமியம் ஆகியவற்றால் மேலும் துர்நாற்றம் வீசுவதாகவும், இது குறித்தும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தாலும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி இன்று அப்பகுதி பெண்கள் குழந்தைகள் மூக்கைப் பொத்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த துர்நாற்றத்தால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.