கலைத்துறையில் சாதனை படைத்த 30 கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகள் வழங்கி கௌரவித்தார்

Loading

திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் கலை பண்பாட்டு துறை சார்பாக மாவட்ட அளவில் கலைத்துறையில் சாதனை படைத்த 30 கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலை விருதுகளையும். காசோலைகளையும் வழங்கி கௌரவித்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்;தில் கலைமன்றம் மூலம் கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருது, 36 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருது, 39 வயதிலிருந்து 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருது, 65 வயது மேற்பட்ட கலைஞர்களுக்கு முதுமணி விருது மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது. அந்த வகையில்,திருவள்ளூர் மாவட்டத்தில் 30 கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகள் வழங்கப்படுகிறது. அந்த கலை என்பது வழிவழியாக பலதலைமுறைகளை கடந்து பயணிக்கிறது.
 அதனடிப்படையில், இன்று நம் இளம் கலைஞர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் இசை மற்றும் கிராமிய நடனப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெறுகின்றனர். முதல் பரிசாக ரூ.6000-ம், இரண்டாம் பரிசாக ரூ.4500-ம், மூன்றாம் பரிசாக ரூ.3500-ம் என வழங்கப்படுகிறது. பள்ளி செல்லும் சிறார்கள் தங்களை கலைத்துறையில் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பகுதி நேர பயிற்சிகளை வழங்கும் கலை பண்பாட்டுத்துறையின் திருவள்ளுரில் ஜவஹர் சிறுவர் கலைப்பள்ளி விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு ரூ.200 சேர்க்கை கட்டணமாக செலுத்தி, 5 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் பயிற்சி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
 அதனைத் தொடர்ந்து விழாவில் மாவட்டக் கலைஞர்களின் பரத நாட்டியம், தப்பாட்டம், பம்பை மேளம், சிலம்பாட்டம் மற்றும் தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கலை பண்பாட்டு இயக்ககம் துணை இயக்குனர் பா.ஹேமநாதன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ், பல்வேறு இயல், இசை, நாடக, மன்ற கலைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *