மதுரை திமுக நிர்வாகிகளுக்கு விளாங்குடி பொதுமக்கள் பாராட்டு

Loading

மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தலைமை செயற்குழு உறுப்பினர் கே.‌ தன செல்வம் அவர்களின் ஆலோசனையின்படி விளாங்குடி 20 வது வார்டு வட்டச் செயலாளர் எம்.ஆர் தன சேகர் தலைமையில் மேற்கு ஊராட்சி நடுநிலைப்பள்ளியை சுற்றியுள்ள சுற்று சுவர் வெளிபகுதிகளில் மண்டியிருந்த முட்செடிகள், புதர்கள், 4 பயனற்ற மாட்டு வண்டிகள் போன்றவைகளை மனித சக்திகள் மற்றும் ஜே சி பி கொண்டும் அகற்றம் செய்தனர். இது பற்றி அரசு பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கையில் பள்ளியை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் புதர்கள் முட்செடிகள் மண்டி இருந்ததால் பாம்புகள் விஷ பூச்சிகள் உள்ளிட்ட ஜந்துக்கள் பள்ளி வளாகத்தில் வந்து அச்சுறுத்தியது எனவே அந்த புதர்களை அகற்றும் படி திமுக 20வது வார்டு நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று திமுக நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கி தாங்களே அதை அகற்றும் பணியை செய்தனர் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தனர். மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில் எங்கள் பகுதிகள் மாலை நேரத்தில் பாம்புகள் நடமாட்டம் இருந்தது இப்போது திமுகவினர் சுத்தப்படுத்தியுள்ளதால் எங்களுக்கு பயம் நீங்கியது அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் எம்.ஆர் நாகராஜ், சரவணன், சந்துரு, மன்மதன், அய்யனார், ரவிச்சந்திரன், சத்யா, அப்பு, தேவர், ராஜ், பாலமுருகன், குமார், சுரேஷ், விஸ்வமூர்த்தி, வசந்த் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் 20வது வட்ட காங்கிரஸ் தலைவர் பொன்னு கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு களப்பணி ஆற்றினர்.
0Shares

Leave a Reply