கோவை அறிவியல் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

Loading

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இன்று 18 வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் ரத்தின சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2109 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் இரண்டு எம்பி மற்றும் 17 பிஎச்டி ஆராய்ச்சியாளர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் இதில் பல்கலைக்கழக அளவில்
39வது ரேங்க் பெற்றவர்களுக்கு கெளரவ பட்டங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்கள்  மத்தியில் சிறப்புரையாற்றிய முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ரத்தின சபாபதி கூறும் பொழுது கல்வி அறிவு, மகா சக்தியாக உள்ளது. இந்த அறிவை சரியான நோக்கத்திற்காக நாம் பயன்படுத்த வேண்டும். உங்களது குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். உங்களது கல்வி, அறிவு, இந்த சமூகத்தின் தூண்டுகோலாக இருக்க வேண்டும். வருங்காலங்களில் தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் எனவும் தொழில் அல்லது வியாபார திறமைகளை மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல்விகளை  கண்டு அச்சப்பட தேவையில்லை உங்களை நம்பி முயற்சி செய்யுங்கள் உழைப்பின் காரணமாக நீங்கள் வெற்றியை நிச்சயமாக அடைவீர்கள் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே.ஆதித்யா, கல்லூரியின் முதல்வர் முதன்மை நிர்வாக அதிகாரி கே சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் ஜெகஜீவன், மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *