போதைப் பொருள் தடுப்பு மற்றும் வாகன விழிப்புணர்வு பேரணி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை மற்றும்
குன்னூர் டிம்பர் டாப்ஸ் பள்ளியும் இணைந்து போதைப் பொருள் தடுப்பு மற்றும் வாகன விழிப்புணர்வு பேரணி,
மனிதனை நேசிப்போம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் பாருக் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த பேரணியை குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி அவர்கள் பேரணியை துவக்கி வைத்து போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் போக்கு வரத்து விதிமுறைகளை பின்பற்றுவது போன்ற விழிப்புணர்வினை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி குன்னூர் மோர்ஸ் கார்டன் பகுதியில் துவங்கி,அரசு லாலி மருத்துவமனை வரை சென்று நிறைவுபெற்றது.
இந்த பேரணியில் டிம்பர்டாப்ஸ் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் பாரூக் அவர்கள் மற்றும் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை உறுப்பினர்கள், செய்தி அலசல் நாளிதழ் நீலகிரி மாவட்ட செய்தியாளர் ரமேஷ் அவர்கள், பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் , உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
வாழ்வது சில காலம் அந்த காலத்தில் நாம் வாழும் வாழ்க்கை பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற வாசகதிற்கு, ஏற்ப சிறப்பாக சமூக சேவை ஆற்றி வரும் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் பாரூக் மற்றும் இதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும், பொது மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் நல்வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்கள் சமூக சேவை.