Watcho ஓ.டி.டி தளத்தின் துவக்கும் நிகழ்ச்சி

Loading

ஸ் டிவி இந்தியா தனது துவக்கமான வாட்சோ / Watcho ஓடிடி தளத்தின்  One Hai Toh Done Hai என்ற  திட்டத்தை துவக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டிஷ் டிவி இந்தியா லிமிடெட் குரூப் தலைமை நிர்வாக அதிகாரி அனில் டுவா, குக் வித் கோமாளி புகழ் நடிகர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய காலகட்டத்தில், குறிப்பாக கொரோனா காலத்திலும், அதற்கு அடுத்தும் ஓடிடி தளங்களின் பயன்பாடும் சேவையும் அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் மொபைலை விட ஓடிடி தளங்களின் பயன்பாடு 5 கோடிக்கும் மேலாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பயனாளர்கள் பல்வேறு ஓடிடி தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான ஆய்வில் ஓடிடி தளத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் தான் அதிகபட்சமாக 44 சதவீதம் வரை பல்வேறு தளங்களில் பயனாளர்கள் அதிகமாக பயன்படுத்துவதாகவும், வாட்சோ எக்ஸ்க்ளூசிவில் நிறைய பொழுதுபோக்கு அம்சங்களுடன் எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்றும், கிராமம், நகரம் இரண்டிலும் ஓடிடி வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் நடிகர் பாலாவுக்கு மேள தாளங்கள் இசைக்கப்பட்டு உற்சாகமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
எல்லா பொழுதுபோக்கையும் ஒரே ஓடிடியில் பார்ப்பது தான் வாட்சோ. இது டிவி சானலுக்கும் மேல் தான் இருக்கும். கிராமங்களில் ஓடிடி வேகமாக சென்று கொண்டு இருக்கிறது எனவும் கூறினார். ஒரு விரலை காட்ட இது சிம்பல் அல்ல. ஒன் நம்பர் என்றும் பாலா கூறினார்….
0Shares

Leave a Reply