பா.ஜ.க., “ஏஜென்டாக ” செயல்படுகிறார் தமிழக ஆளுநர்

Loading

பா.ஜ.க , ஏஜென்டாக தமிழக ஆளுநர் செயல்படுகிறார் ,தமிழக  காங்கிரஸார் ஒற்றுமை காக்க வேண்டும் என  தமிழக சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும்  தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற வன்முறை குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் தமிழ் சங்கமம் வரலாற்றை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட சங்கமமாகவும் சிறுபான்மை மக்களை அன்னியப்படுத்துவது போல் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது . இஸ்லாமிய, கிருத்துவ மக்களால் இலக்கியங்களில் வெளிநாட்டில் இருந்து வந்த கிருத்துவ போதகர்கள் பாதிரியார்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதற்கு பாடுபட்டனர் சிறுபான்மை இன மக்கள் தமிழுக்காக தொண்டாற்றினர் தற்போது நடந்து முடிந்த தமிழ் சங்கமம் தமிழக முதல்வர் அந்த மேடையில் இல்லாதது அரசு பிரதிநிதிகளும் அமர வைக்காதது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது பாஜகவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத ஒரு நிகழ்வு ஆகும் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியம் ஆகியவற்றிற்கும் பாஜகவிற்கு சம்பந்தம் துளி கூட இல்லை வரலாற்றை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட தமிழ் சங்கமம், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை துவக்கிய பிறகு மக்கள் மத்தியில் ஒரு புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் தமிழகத்தில் சுயநலத்தை மறந்து அனைத்து காங்கிரசாரும் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கூறினார் .ராகுல் காந்தி தனது காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரையின் இடையே குஜராத்தில் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டார் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேஷ் தேர்தலை கவனித்துக் கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளனர் தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்தும் ராகுல் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் ,காசியில் தமிழ் சங்கமம் மத்திய அரசு நடத்துகிறது ஆனால் முதல்வருக்கு அழைப்பு விடுக்கவில்லை சிறுபான்மையினர் அதில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் தமிழர்களை, சிறுபான்மை பெரும்பான்மையினர் என பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா ஜ க முயல்கிறது இதை வன்மையாக கண்டிக்கிறேன் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சமணர்களும் தமிழர்கள். பல இலக்கியங்களை உருவாக்கியவர்கள் ஜி யு போப் போன்றவர்கள் பல இலக்கியங்களை மொழிபெயர்த்தவர்கள் எனவே அவர்களை புறக்கணித்ததை வன்மையாக கண்டிக்கிறேன் கொங்கு மண்டலத்திலும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா ஜ க முயல்கிறது தமிழக ஆளுநர் பா ஜ க ஏஜண்டாக செயல்பட்டு வருகிறார் ,கொங்கு மண்டலத்தில் பதட்டத்தை உருவாக்கி வளர்ச்சியை தடுத்தினால் தமிழகத்தின் வளர்ச்சி குறையும்என்று அது கருதுகிறது அதை வைத்து தமிழகத்தில் கட்சி வளர்க்க நினைக்கிறது துரதிஷ்டவசமாக தனது கொள்கைகளை மறந்து அ தி மு க , பா ஜ க வை ஆதரிக்கிறது பிரதமர் மோடி ஆண்டொன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்றார் ஆனால் இப்போதுதான் 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கியுள்ளார் மத்திய அரசில்மட்டும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன உலகிலேயே படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் தேசம் இந்தியா தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர் குறித்த குற்றச்சாட்டை கூறினார் அத்துறை அதற்கு தகுந்த விளக்கம் அளித்து குற்றச்சாட்டை மறுத்துள்ளது எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசியலமைப்பு அங்கிகாரம் பெற்றது எனவே பொறுப்புடன் பேச வேண்டும்  எடப்பாடி பழனிச்சாமி வேலுமணி போன்றவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற தடை உத்தரவு பெற்று செயல்படுகின்றனர் அவர்கள் ஆட்சியில் தான் கொரோனா காலத்தில் பணியாளர்கள் அணியும்அங்கி கூட அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டது கொரோனா பரிசோதனை கட்டணம் பல மடங்கு நிர்ணயிக்கப்பட்டு அதனால் பல ஆய்வகங்கள் குறைந்த காலத்தில் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர் ஊழலுக்கு வித்திட்டவர்கள் அவர்கள் முன்பு கலைஞர் அரசின் போது சிமெண்ட் விலை உயர்வு குறித்து நான் புத்தகம் எழுதினேன் புத்தகத்தில் சிமெண்ட் கம்பெனிகளுக்கு எதிராக கூறி இருந்தேன் தவிரஊழல் என்று கூறவில்லை எப்படி ஒரு ஆட்சி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் எடப்பாடி  ஆட்சி . எப்படி ஒரு ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஸ்டாலின் ஆட்சி சென்னையில்சமீபத்தில் பெய்த மழையில் மக்கள் பாதிப்பு இல்லை என்பதை வைத்து ஆட்சியின் சிறப்பை உணரலாம் ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை நீதிமன்ற உத்தரவு அதை எதிர்க்கவில்லை அதே சமயத்தில் தீவிரவாதிகளை ஹீரோ போல வரவேற்பதை  நாங்கள் ஏற்கவில்லை  பால் விலை மற்றும் மின்கட்டணம் தமிழகத்தை விட கர்நாடகாவில் மிக அதிகம் பல வருடங்களாக கட்டணம் உயர்த்தப்படாததால் அந்த நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன எனவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார் . அப்போது ஈரோடு கிழக்கு எம் எல் ஏ திருமகன் ஈவேரா ,முன்னாள் எம் எல் ஏ  பழனிச்சாமி , தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உட்பட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *