வேலூரில் 3 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் புதிய் தொழிற் சாலைகள்
வேலூர் மாவட்டம்அப்துல்லாபுரத்தில் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 3 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாறிவரும் தொழிற் சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பணிமனைக்கான கட்டிடங்கள் கட்டப்படுவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகள் அமைச்சர் ஏ.வ. வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ராஜமணி, அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ரவி, உள்ளனர்.