திருவள்ளூர் அருகே மனைவியை கொடுமைப்படுத்தி தாக்கியதில் பலத்த காயம்

Loading

திருவள்ளூர் நவ 25 : திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த புதுப்பனம்பாக்கம் கிரைமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமாரி (36). இவரது கணவர் குமார் (44). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.திருமணம் ஆன நாளிலிருந்து பிரசன்னகுமாரியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக ஆண் வாரிசு இல்லாததால் 2-வது திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக  பிரசன்னகுமாரியை கணவர் குமார் மற்றும் அவரது தம்பி மோகன், மாமியார் வெங்கடம்மாள், மாமனார் செங்கையா ஆகியோரும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து பிரசன்னகுமாரி, திருவாலங்காடு காவல் நிலையம்,  மாவட்ட எஸ்பி., அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தார் துன்புறுத்துவதாக புகார் கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன் குமார் மற்றும் மனைவி பிரசன்னகுமாரி ஆகிய  இருவரையும் திருத்தணி டிஎஸ்பி., விக்னேஷ்  அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் தாக்க முயன்றதில் பிரசன்னகுமாரிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்யவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இதனால் கையில் வெட்டு காயத்துடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பிரசன்னகுமாரியிடம் திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தினர்.ஆண் வாரிசு இல்லாததால் 2-வது திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னை துன்புறுத்தியதாக பிரசன்னகுமாரி கொடுத்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *