ஈரோட்டில் உடற்பயிற்சி கூடம் ” பூமி பூஜை” காங்கிரஸ் எம்.எல்.ஏ., பங்கேற்பு.!

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜி புரம் பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைவதற்கு பூமி பூஜையில் கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ பங்கேற்றார்.
 ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ. திருமகன் ஈவெரா  அவர்கள் தேர்தல் வாக்குறுதியின் படி தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி மண்டலம் 2 இல் அமைந்துள்ள ராஜாஜிபுரம் பகுதியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கையின் படி புதிதாக நவீன உடற்பயிற்சி கூடம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் ஒதுக்கீடு செய்து இதற்கான பணிகள் தொடங்கும் பொருட்டு  பூமி பூஜை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணி , ஈரோடு  மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் , இரண்டாம் மண்டல தலைவர் காட்டு சுப்பு என்கிற சுப்பிரமணி , மாமன்ற உறுப்பினர் தீபலட்சுமி அண்ணாதுரை , திமுக பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன், வார்டு நிர்வாகி மஸ்தான் ,மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளான மாவட்ட துணை தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மாநில பொதுக்குழு உறுப்பினர்களான ஏ. மாரியப்பன், வி எம் கே செந்தில் ராஜா, மண்டல தலைவர்களான ஆர். விஜயபாஸ்கர், அல்டிமேட் தினேஷ் ,சசிகுமார்,மாநகர் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில எஸ் சி துறை துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால், டி எம் ஐ சபீர் அலி, பாலதண்டாயுதம், ராஜாஜிபுரம் காங்கிரஸ் நிர்வாகிகளான சிவா,சக்தி குமரேசன், ஒன்றாம் மண்டல துணைத் தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *