காட்பாடியில் ரெட் கிராஸ் சிஎம்சி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்.

Loading

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட கிளையின் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் காட்பாடி  லயன் சங்கமும், உதவும் நேசங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனமும், வேலூர் சி.எம்.சி.கண்மருத்துவமனையும் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நேற்றுகாலை 9 மணி முதல் பிற்பகல் வரை காட்பாடி காந்திநகர் திருமகள் திருமண மண்டபத்தில்நடைபெற்றது.நிகழ்வுக்கு ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். காட்பாடி லயன் சங்க தலைவர் டி.செல்வமணி முகாமினை துவக்கி வைத்தார்.உதவும் நேசங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் எஸ்.ஜி.கார்த்திக்பிரேம்நாத் ரெட்கிராஸ் சங்க மருத்துவ குழு தலைவர் கண்மருத்துவர்வீ.தீனபந்து, செயலாளர்எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.மாவட்ட லயன்ஸ் சங்க தலைவர் தங்கவேலு, காட்பாடி லயன் சங்க பொருளாளர் கே.சரவணன், துணைத்தலைவர் பி.பழனியப்பன், முன்னாள் தலைவர் சி.சந்திரசேகரன், டி.எஸ்.சரவணன் காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவை துணைத்தலைவர்கள்ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, தணிகை செல்வம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *