வேலூர் தனபாக்கியம்கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தினம்.

Loading

வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் தனபாக்கியம் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கணினிக் குற்றங்கள் மற்றும் வலையமைப்பு குற்றங்கள் குறித்து உரையாற்றி அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, பெண்கள் அதிகாரம் மற்றும் சமூக நீதி அமைப்பு (தமிழ்நாடு பாண்டிச்சேரி) ஒருங்கிணைப்பாளர் திருமதி. திவ்யா நந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோமதி, சைபர் கிரைம் ஆய்வாளர் திருமதி அபர்ணா, காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி பத்மா கிருஷ்ணசாமி, மகளிர் கல்லூரி தாளாளர் மணிநாதன், முதல்வர் டாக்டர் பானுமதி, உள்ளூர் புகார் குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயா, மகளிர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருமதி சுமதி, உள்ளனர்.

0Shares

Leave a Reply