கடந்த 20 ஆண்டு காலமாக இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் குலதிபமங்கலம் கிராமம் இங்கு பொதுப்பணிக்கு சொந்தமான ஏரி உள்ளது இந்த ஏரி தென்பெண்ணை நதியை நம்பி உள்ளது கடந்த 20 ஆண்டு காலமாக இந்த ஏரிக்கு நீர் வரத்து இல்லை ஏரி வாய்க்காவும் சுத்தம் செய்யவில்லை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இதை கண்டு கொள்ளவில்லை, இந்த ஏரி தண்ணீரை நம்பி சுமார் 600 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயிகள் பயிர் வைப்பது நிறுத்தி விட்டார்கள் பணம் உள்ள விவசாயிகள் போர்வெல் போட்டு தண்ணி எடுத்துக் கொள்கிறார்கள் ஏழை விவசாயிகள் என்ன பாவம் செய்தார்கள் இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை, மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை எப்பொழுது இந்த ஊருக்கு விடிவு காலம் பிறக்கும் . புதிய அரசு வந்தால் விடிவுகாலம்பிறக்கும் என்று நினைத்தார்கள் ஆனால்அப்படியே தான் உள்ளது இந்த ஊர் மக்கள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நடக்குமா? என்று பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வளர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.