மருத்துவ கவுன்சில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரிக்கைமருத்துவ கவுன்சில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரிக்கை

Loading

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரிக்கை ஈரோடு நவம்பர் 21 தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க தேசிய துணை தலைவர் டாக்டர் சி என் ராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஈரோட்டில் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும் டாக்டர்கள் மருத்துவ தொழில் புரிய கவுன்சிலில்பதிவு செய்ய வேண்டும் டாக்டர்கள்,தனியார் மருத்துவமனைகள் தவறு இழைக்கும்போது நடவடிக்கை எடுக்க அதற்கு அதிகாரம் உள்ளது நவீன மருத்துவம் சம்பந்தமான பயிற்சிகளை அது வழங்கலாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த கவுன்சிலின்நிர்வாக குழு தேர்தல் நடைபெறும் மொத்தம் உள்ள பத்து இயக்குனர்களில் மூன்று இயக்குனர்களை அரசு நியமித்துள்ளது எஞ்சியஏழு இயக்குனர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் உள்ள சுமார் 1.75 லட்சம் டாக்டர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் டிசம்பர் 19 இல் இருந்து ஜனவரி 19 வரை அஞ்சல் மூலமாக வாக்களிக்கலாம் இருபதாம் தேதி வாக்குகள்  எண்ணப்பட்டு இயக்குனர்கள் அறிவிக்கப்படுவார்கள் பின்னர் இந்த இயக்குனர் குழு கூடி கவுன்சிலின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலை இதற்கென நியமிக்கப்பட்ட பதிவாளர் நடத்துகிறார் ஆனால் இதுவரை வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படவில்லை சுமார் 300-க்கும் மறைந்த டாக்டர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை மருத்துவ தொழில் விட்டு சென்றவர் பெயரும்  உள்ளதுதேர்தல் அறிவிப்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் கல்வி தகுதி உள்ளது போல் விண்ணப்பிக்க வேண்டும் இல்லை என்றால் விண்ணப்பம் செல்லாததாக ஆகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் கவுன்சில் பட்டியலில் எம் டி எம் எஸ் போன்ற கூடுதல் தகுதிகள் குறிப்பிடப்படவில்லை  எனவே ஒருவர் சரியாக பட்டியலில் உள்ளது போல் விண்ணப்பிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது கவுன்சிலின்அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமாக நடைபெறுகின்றன ஆனால் வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் இதுவரை வெளியிடப்படவில்லை எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து உள்ளோம் நீதிமன்றத்திலும் தொடுக்கப்பட்ட வழக்கு 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது கவுன்சில் தன்னாட்சி அமைப்பு பெற்றது என்றாலும் அரசின் கண்காணிப்பின் கீழ் வருகிறது எனவே இபாபிரச்சினையில் அரசு தலையிட்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்
0Shares

Leave a Reply