கன்னியாகுமரி உலக மீனவர் தினம்
உலக மீனவர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர்
மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர்.கே.எஸ். பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கோட்டார் மறை மாவட்ட பேராயர் நசரேன் சூசை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) உட்பட பலர் உள்ளார்கள்.