மதுரையில் உதயநிதி ஸ்டாலின் 29 ம் தேதி எழுச்சி நாளாக இருக்க வேண்டும் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி சிறப்புரை
மதுரை யாதவர் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி மஹாலில் தி.மு.க அவைத் தலைவர் பாலசுப்பிரமணி தலைமையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி சிறப்புரையாற்றி பேசும் போது, மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே நடைபெற இருக்கின்ற நலத்திட்ட உதவிகள் வழங்க 29 ந் தேதி வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்கும் நிகழ்ச்சி எழுச்சிநாளாக இருக்க வேண்டும் எனவும், வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பல்லாயிரக்கணக்கனோர் பெரும் திரளாக கலந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் சிறப்புரையாற்றினார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கரு. தியாகராஜன்,
மாவட்ட துணைசெயலாளர்கள் சுந்தர், கோபி, ஆசைக் கண்ணன், வடிவேல்முருகன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் நேரு பாண்டியன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திருப்பாலை பகுதி கழகச் செயலாளர் கே.பி சசிக்குமார் Ex.MC , ஆனையூர் பகுதி கழக செயலாளர் மருது பாண்டியன், புறநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி ராஜா, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.ஜெ மருது ராஜா, 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வ கணபதி, 4-வது வார்டு உறுப்பினர் பாபு, 7-வது மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபாகரன், வட்ட பிரதிநிதி சுந்தரேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.