பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமத்தில் தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
பண்ருட்டி, நவ.21- கடலூர் மாவட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் அண்ணா கிராமம் வட்டாரத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில் உள்ள தொழில் சார் சமூக வல்லுனர்களுக்கு தொழில் முனைவு மேம்பாட்டு பயிற்சி அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்று பாராட்டினார். மேலும் தொழில் சார் சமூக உள்ளனர்களுக்கு நடத்தப்படும் மூன்று நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தங்களின் ஊராட்சிகளில் உள்ள தொழில் செய்ய ஆர்வமுள்ள மகளிர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி இணை மானியத் திட்டத்தின் மூலம் பயனடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொழில் சார் சமூக வல்லுநர்களுடன் கலந்துரையாடல் செய்தார். நிகழ்ச்சியில் அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா கையர் கன்னி, வாழ்ந்து காட்டும் திட்ட செயலாளர் அலுவலர் பாலமுருகன், ஹெலன் ஜெனிபர், இளம் வல்லுநர் கதிர்வேல், தலைமை அலுவலர் பயிற்சிகள் மாவட்ட வளமையும் ஊராட்சிகள் கடலூர் வட்டாரத்திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.