புதிய நியாயவிலைக் கடைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்.

Loading

அரியலூர் மாவட்டத்தில் 04 முழு நேர மற்றும் 02 பகுதி நேர புதிய நியாயவிலைக் கடைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய முழு நேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (20.11.2022) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி, அரியலூர் மாவட்டத்திலும் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் புதிய முழு நேர மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் இன்றயை தினம் திறந்து வைத்தார்.
இதில், செந்துறையில் முழு நேர நியாய விலைக்கடை எண்.03-ல் 680 குடும்ப அட்டைகளும், முழு நேர கடை எண்.04-ல் 534 குடும்ப அட்டைகளும், உஞ்சினி முழு நேர நியாய விலைக்கடை எண்.02-ல் 508 குடும்ப அட்டைகளும், சிறுகடம்பூர் முழு நேர நியாய விலைக்கடை எண்.02-ல் 514 குடும்ப அட்டைகளும், சிறுகளத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி நேர நியாய விலைக்கடை எண்.02-ல் 204 குடும்ப அட்டைகளும், சித்துடையார் பகுதி நேர நியாய விலைக்கடையில் 240 குடும்ப அட்டைகளும் என மொத்தம் 04 முழு நேர நியாய விலைக்கடைகளும், 02 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முழு நேர நியாய விலைக்கடைகள் வாரத்தில் 6 நாட்களும், பகுதி நேர நியாய விலைக்கடைகள் வாரத்தி;ல் 2 நாட்களும் செயல்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை தங்களது பகுதிகளிலேயே நியாய விலைக்கடைகளில் பெற்று பயன்பெற முடியும். இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஏனைய கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருமதி.ம.தீபாசங்கரி, துணைப்பதிவாளர் (பொ.வி.தி) திரு.அறப்பளி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ரவிச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் திரு.பழனிசாமி, திரு.சசிக்குமார், திரு.விவேக், வட்டாட்சியர் திருமதி.பாக்கியம் விக்டோரியா, கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள்; உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *