தூத்துக்குடியில் எல்.பி.ஜி முனைய சேமிப்பு திறனளவை 30,000 மெட்ரிக் டன்கள் கூடுதலாக உயர்த்தி விரிவாக்கும்
நவம்பர் 17, 2022: தூத்துக்குடி, இந்தியா: எஸ்ஹெச்வி எனர்ஜி நிறுவனம், சிங்கப்பூரை அடித்தளமாக கொண்டு இயங்கும் அதன் வர்த்தக செயல்பாட்டுப் பிரிவான S&RM (சப்ளை & ரீசர்ச் மேனேஜ்மெண்ட்) வழியாக இந்தியாவின் தூத்துக்குடி நகரில் அமைந்திருக்கும் அதன் கிரையோஜெனிக் எல்பிஜி (திரவ நிலை பெட்ரோலிய வாயு) சேமிப்பு முனைய கொள்ளளவு வசதியை விரிவுபடுத்தியிருக்கிறது. இந்த விரிவாக்கம், முதன்மையாக எஸ்ஹெச்வி எனர்ஜியின் இந்திய துணை நிறுவனமான சூப்பர்கேஸ் மூலம் இந்திய சந்தைக்கு எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்கிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் அமைந்திருக்கும் இந்த எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறன் தற்போதைய 8500 மெட்ரிக் டன்னிலிருந்து, 38500 மெட்ரிக் டன்களாக விரிவுபடுத்தப்படுகிறது. இந்திய ரூபாயில் 500 கோடி ரூபாய் முதலீடு இதற்காக செய்யப்படும். இந்த முனையத்தின் விரிவாக்க செயல்பாடு, எஸ்ஹெச்வி எனர்ஜி – ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. பிராம் கிராபெர், சூப்பர்கேஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. சாந்தனு குஹா ஆகியோர் முன்னிலையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. வேர்ல்டு எல்பிஜி அசோசியேஷனின் (WLPGA) இயக்குனர்கள் குழுவின் ஒரு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் திரு. பிராம் கிராபெர், இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இந்த வாரம் நடைபெறுகின்ற “உலக எல்பிஜி வாரம் 2022” நிகழ்விலும் கலந்து கொள்கிறார்.
எல்பிஜி முனைய திறன் விரிவாக்கம் குறித்து ஊடகத்தினரிடம் பேசுகிறபோது திரு. பிராம் கூறியதாவது: “தமிழ்நாட்டிலுள்ள எமது வாடிக்கையாளர்கள் எல்பிஜிக்கு கட்டுபடியாகக்கூடியவாறு எளிதான அணுகுவசதியை பெறுவதை உறுதிசெய்வதே இந்த எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறனை விரிவாக்கம் செய்வதற்கான எமது நோக்கமாகும். அரசு / பொதுத்துறையில் செயல்படுகின்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர்களுக்குத் தேவைப்படுகின்ற எல்பிஜி மற்றும் சேமிப்பு வசதிகள் ஆகிய இரண்டையும் வழங்குவதற்கு இந்த விரிவாக்கப் பணி எங்களை அனுமதிக்கும். இதன்மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த எல்பிஜி செயல்பாடுகள் வலுப்படுத்தப்படும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதிகள் திறம்பட மேம்படுத்தப்படும்.”
திரு. பிராம் மேலும் பேசுகையில்: “இந்தியாவின் நீண்டகால ஆற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை துரிதமாக்க எல்பிஜி உதவும். அத்துடன், நிலக்கரி மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் போன்ற அதிக மாசு ஏற்படுத்தும் எரிபொருட்களிலிருந்து இந்நாடு விலகி மாறுவதற்கு இது ஆதரவளிக்கும்” என்று குறிப்பிட்டார்.
“தற்போது இருந்து வரும் பிற மாற்று எரிபொருட்களை விட அதிக தூய்மையான எரிபொருளாக எல்பிஜி திகழ்கிறது; அதுமட்டுமின்றி, இந்தியாவில் அதிக அணுகுவசதி திறன் கொண்டதாகவும் இது இருக்கிறது. இயற்கை எரிவாயு சென்றடைய முடியாத இடங்களுக்கும் எல்பிஜியை அதிக எளிதாக கொண்டுசெல் முடியும்” என்று சூப்பர்கேஸ் – ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. சாந்தனு குஹா குறிப்பிட்டார். “பல முக்கியமான உபயோகங்களைக் கொண்டதாக எல்பிஜி இருந்து வருகிறது. சமையலுக்கான எரிவாயுவாக பயன்படுத்துவது மட்டுமின்றி, போக்குவரத்திற்கும் மற்றும் தொழிலகங்களுக்கும் எல்பிஜி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் நீண்டகால அடிப்படையிலான ஆற்றல் தேவைகளுக்கு ஆதரவளிக்க எல்பிஜி கட்டமைப்பு வசதிகளில் அதிகரித்த முதலீடு செய்யப்படுவதை உறுதிசெய்ய இதற்கான சந்தையில் தற்போது இருந்து வரும் கட்டுப்பாடுகள் மேலும் அகற்றப்படுவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்,” என்று திரு. சாந்தனு மேலும் கூறினார்