மலையாளத்தில் அறிமுகமாகிறார் ஆனந்தி

Loading

தமிழில் ‘கயல்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘விசாரணை’, ‘பண்டிகை’, ‘ரூபாய்’, ‘சண்டிவீரன்’, ‘கமலி பிரம் நடுக்காவேரி’ உள்பட சில படங்களில் நடித்தவர், ஆனந்தி.

சாக்ரடீஸ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு, ஒரு மகனுக்கு தாயான அவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவரது கைவசம் ‘அலாவுதீனும் அற்புத கேமராவும்’, ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ போன்ற படங்கள் இருக்கிறது. தவிர, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் ‘யூகி’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘ஆதிர்ஷயனம்’ என்ற பெயரிலும் தயாராகும் படத்தில் நடித்துள்ளார்.

இதன் மூலமாக அவர் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இதற்கு முன்பு கூட பல மலையாளப் பட வாய்ப்பு வந்தது. ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. ‘யூகி’ படத்தின் இயக்குனர் ஷாக் ஹாரிஸ், முதலில் என்னை தமிழ்ப் பதிப்புக்கு ஒப்பந்தம் செய்தார்.

மலையாளப் பதிப்பில் வேறொருவர் நடிக்க இருந்தார். ஆனால், எனது நடிப்பைப் பார்த்துவிட்டு, மலையாளத்திலும் என்னையே நடிக்கச் சொல்லிவிட்டார். என்னுடன் கதிர், நரேன், நட்டி, பவித்ர லட்சுமி, ஆத்மியா நடித்துள்ளனர். இப்படம் வாடகைத்தாயின் வாழ்க்கையை மையப்படுத்திய கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. நான் வாடகைத்தாய் கேரக்டரில் நடித்துள்ளேன். இப்படம் வெளியான பிறகு நிறைய மலையாளப் பட வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன்.

0Shares

Leave a Reply