கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கோகுலம் பார்க் உணவக அரங்கில் இன்று இந்த ஆண்டுக்கான கேக் மிக்ஸிங் செர்மனி நிகழ்ச்சி நடைபெற்றது
ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பன்டிகை
கொண்டாட்படும் இந்த நாளில் அனைவருகும் ப்ளம் கேக் வழங்கப்பட்டு இந்த நாளை கொண்டாடுவது வாடிக்கை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ப்ளம் கேக் தயாரிக்கும் பணிகளுக்காக அதனை தயார்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கோகுலம் பார்க் உணவக அரங்கில் நடைபெற்றது. இதில் ஏற்கெனவே பதபடுத்த பட்ட உலர் திராட்சை, முந்திரி, வால்நட், பாதாம் துருவல், பிஸ்தா, போன்றவற்றின் மீது, ஒயின், ரம், விஸ்கி, பிராந்தி, போன்ற உயர்தரமான மது வகைகளை, இதன் மீது ஊற்றி மிக்ஸிங் செய்யும் பணி நடைபெற்றது.
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட இந்த பொருட்கள் சுமார் 45 நாட்கள் காற்று புகா வண்ணம் பதப்படுத்தி சேமித்து வைக்க படும். அவ்வாறு பதப்படுத்தப்பட்ட வகைகள் கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களுக்கு முன்னர் எடுத்து ப்ளம் கேக் தயாரிக்க இதனை பயன்படுத்துவார்கள். அப்பொழுது இந்த உலர் பொருட்கள் முறையாக ப்ளம் கேக் தயாரிக்க தயாரான நிலை அடையும்.
இந்த நிகழ்ச்சியானது கோகுலம் பார்க் நிறுவனத்தின் க்ரூப் ஜெனரல் மேனேஜர் நீனா கிஷோர் மற்றும்
ஜெனரல் மேனேஜர் சீனிவாசன், தலைமை செப் அருள் செல்வன்,
ஜெகன், அவரது குழு அடங்கிய 150பேர் கலந்து கொண்டு இந்த கேக் மிக்ஸிங் செர்மனியை சிறப்பாக வடிவமைத்தனர்.