பள்ளி மாணவர்களுக்கு “பாம்பு பிடி மன்னர் ” விழிப்புணர்வு..!
ஈரோடு நவம்பர் 9
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் பள்ளி மாணவர்கள் என் எஸ் எஸ் முகாமில் மாணவ- மாணவியர்களுக்கான முகாமில் “பாம்பு பிடி மன்னர் யுவராஜ் ” கலந்து கொண்டு பாம்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஓடக்காட்டு மேடு அருகே உள்ள அரசுப் பள்ளியில் ,மீனாட்சி செங்குந்தனார் பள்ளி மாணவர்களுடைய என் எஸ் எஸ் கேம்ப் ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது அதின் நிறைவு விழாவில் செங்குந்தர் பள்ளி நிர்வாக இயக்குனர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியினை மீனாட்சி செங்குந்தர் பள்ளி ஏ ஒ தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஈரோடு பாம்பு பிடி மன்னர் யுவராஜ் பாம்பைப் பற்றிய விழிப்புணர்வும், எந்தெந்த பாம்பு விஷத்தன்மை உடையது ,பாம்பு கடித்தால் முதல் உதவி எவ்வாறு செய்ய வேண்டும் பாம்பை கண்டதும் அச்சப்படாமல் எப்படி தைரியத்தை வரவழைக்க வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வு விளக்கம் அளித்து தெளிவாக மாணவ மாணவியர் புரிந்து கொள்ளும் நிகழ்வில் ஒரு சில பாம்புகளை நேரடியாக கொண்டு வந்து அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார் மேலும் பாம்புகளால் ஏற்படும் நன்மை தீமைகள் விஷமற்ற பாம்புகள் எந்த பகுதியில் எந்த பாம்புகள் அதிகமாக இருக்கும் பாம்பு கடிக்காமல் தற்காப்பு முறைகள், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் யுவராஜ் செயலை பாராட்டி பள்ளி தலைமை சால்வை அணிவித்து சிறப்பு பரிசு அளித்து மகிழ்வித்தனர் .