அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் புதிய வழித்தட பேருந்துகள் துவக்க விழா .
வேலூர் நவம்பர் 9
வேலூர் மாவட்டம் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கதளபதி ஆணைக்கிணங்கநேற்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் அணைகட்டு பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் நலன் கருதி நகரதட நீட்டிப்பு பேருந்து துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் .இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு,தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் திரு.கணபதி, போக்குவரத்து கழக வணிகவியல் மேலாளர் பொன் பாண்டியன், மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.