திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Loading

திருவள்ளூர் நவ 09 :
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொருக்கு தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவர்  திருவள்ளூர்  தாலுக்காவிற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் 85 சென்ட் நிலத்தை‌ அபகரித்த உறவினர் மனோகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றும்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  பலமுறை மனு கொடுத்துள்ளார்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்துவிட்டு மேலே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக  அவரை  வெளியே அழைத்து வந்து தண்ணீர் ஊற்றி அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு உள்ளேயே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0Shares

Leave a Reply