சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

Loading

சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கோராத்துப்பட்டியில் உள்ள  தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் இரா.விஜயராசா தலைமையில் வகித்தார்.மாவட்ட தலைவர் ப.முருகேசன் வரவேற்புரையில்*
நடைபெற்றது.வன்னியர் சங்க ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பொன்.நா.குணசேகரன் மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுவேலு கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன்,ஞானவேலன்,
மாதேஸ்வரன்,கோராத்துப்பட்டி ரத்தினவேலு,சேசன்சாவடி பன்னீர்செல்வம்
மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் உழவன் முருகன்*
மாவட்ட இளைஞர் சங்க தலைவர் கோகுலகண்ணன்
மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் வேல்முருகன்
சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் இயற்றிய சமூகநீதியின் வேத புத்தகமாக போற்றப்படும் சுக்கா! மிளகா! சமூகநீதி!புத்தகத்தை தமிழக அரசின் பாட திட்டத்தில் இணைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
பாமக 2.0 அனைவருக்கும் இலவச கல்வி,இலவச சுகாதாரம்,வேளாண் இடு பொருட்கள் இலவசம் ஆகியன வற்றையும் எடுத்து கூறி வருகின்ற 2026 ல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆட்சி அமைய பாடுபடுவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருமணி முத்தாற்றை தூர்வாறுவது, புதிய தடுப்பணைகள் கட்டி பல ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பயன்பெற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சின்னனூர் ஊராட்சியில் 1 வது வார்டில் 25 ஆண்டுகளாக.கழிவு நீர் செல்வதற்க்கு வழி இல்லாமல் தேங்கி நிற்கின்றது.இதற்கு கழிவு நீர் செல்ல பாலம் அமைத்து சுத்திகரிப்பு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *