“மக்கள் குறைதீர் நாள் கூட்டம்” டிஆர்ஓ பங்கேற்பு.!
ஈரோடு நவம்பர்
வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரில் புகார் மனு பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம் இதைத் தொடர்ந்து நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷனி சந்தியா பங்கேற்று பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து மனு ,கணவனால் கைவிடப்பட்டோர்.
,ஆதரவு அற்றோர் ஆகியோர் உதவித்தொகைக்காக பெறப்பட்ட மனுக்கள், இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு ,வாரிசு சான்றிதழ் கேட்டு மனு தொழில் கடன் சாலை வசதி அடிப்படை வசதி மேம்படுத்த மனு குடிநீர் வசதி மாற்று திறனாளிகள் கோரிக்கை மனு என மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 178 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடன் வழங்கப்பட்டு தீர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார் .
மேலும் தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அமைச்சர் பெருமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட உதவி ஆட்சியர் பொன்மணி ஐஏஎஸ் ,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல அலுவலர் ரங்கநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இணை இயக்குனர் மீனாட்சி , மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.