மரபணு குறைபாடு உள்ள கோச்சர்(Gaucher) நோயை கருவிலேயே கண்டறியப்பட்ட வேண்டும்.
கோச்சர் எனும் நோயானது கல்லீரல் மண்ணீரல் போன்ற உள் உறுப்புகளில் கொழுப்பு சத்து அதிகமாக சேர்ந்து அதன் செயல்பாடுகளை பாதிக்கிறது .
மேலும் எலும்புகளில் கொழுப்புகள் சேர்ந்து பலவீனமடைய செய்கிற ஒரு வித நோய் .
மரபணு குறைபாடன இது போன்ற நோய்களை கண்டறிவது அரிதாக இருப்பினும் , குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணித்து , மருத்துவர்கள் பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நோயை அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும்
சர்வதேச கௌசர் தினமாக மருத்துவ துறையில் கடைபிடித்து வருகிறது.
அரிய நோய்களின் ஒரு பிரிவான லைசோசோமால் ஸ்டோரேஜ் டிஸார்டர்ஸ் (LSD) கரு பராமரிப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை (ஃபெடல் கேர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்(FCRF) மற்றும் சனோஃபி ஆகியவற்றின் பிரிவான, அரிதான கோளாறுகளுக்கான சிறப்பு மையம் (சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஃபார் ரேர் டிசார்டர்ஸ் (CERD) ஏற்பாடு செய்த, சென்னையில் நடந்த சர்வதேச கவுச்சர் தின நிகழ்வில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.
அரிதான இந்த நோய்க்கு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.
மருத்துவத்துறைக்கே சவாலாக கருதப்படும் இந்நோயை பற்றிய பாதிப்புகள் கடந்த 20 வருடங்களாகத்தான் அறியப்படுகிறது.
மரபணு சார்ந்த நோயை குழந்தை கருவாக உருவாகும் போதே பரிசோதனை செய்து ஆரம்பத்திலேயே கண்டறிந்தால்
இது போன்ற பிரச்சினைகளிருந்து மீள முடியும்.
முதல் குழந்தை கெளச்சர் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அடுத்த குழந்தையை பெறுவதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் . கருஉருவானப் பின் கட்டாயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வி.எச்.எஸ் மருத்துமனையில் கடந்த 20 ஆண்டுகளாக கோச்சர் (Ghacher ) தினம் என்று ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது .
பொதுமக்கள் சினிமா , பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் ஈடுபாடு கொள்வதை விட இது போன்ற பயனுள்ள மருத்துவம் சார்ந்த அறிவினை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக நான் இத்துறைக்கு தூதராக பயணிக்கிறேன். மக்களால் பெற்ற திரையுலக புகழினை இதுபோன்ற விழிப்புணர்வுக்காக செலவிடுவதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.