பண்ருட்டி நகராட்சி  22 வது வார்டில் பகுதி சபா கூட்டம்

Loading

பண்ருட்டி, நவ.7-  கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி  22 வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர்  சரளா மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 22 வது வார்டில் உள்ள அனைத்து குறைகளை விவாதிக்கப்பட்டது. இதில் முருங்கப்பாக்க தெரு மற்றும்  காமராஜர் தெருக்களில் மழை பெய்தால் தெருக்களில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால்
வடிகால் அமைப்பு வசதி செய்து தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் முதியோர் உதவித்தொகையை தமிழக அரசு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முதியோர் உதவித் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இக்கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் பாக்கியநாதன், நகர மன்ற எதிர்க்கட்சி தலைவர் அதிமுக கவுன்சிலர் மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply