புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளரை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்,
புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்களுக்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி யில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான அனைத்து வேலைகளும் நடைபெறும் சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட உள்ளது . புதுச்சேரியில் விமான நிலையத்திற்கான விரிவாக்கம் நடைபெற உள்ளது. காவல்துறையில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.வில்லியனூ ரில் ஆயிஷ் மருத்துவமனை காரைக்கால் மாநிலத்திலும் நிறுவப்பட உள்ளது. புதுச்சேரியில் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினர் செய்தியாளர்கள். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தி உள்ளார். கேள்விக்கு விளக்கமாக பதில் அளித்த அமைச்சர் மத்திய அரசோடு கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் ரூ14 ,78,986/- லட்ச ரூபாய் செலவில் கழிவு வாய்க்கால் வசதிக்கு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன். நிகழ்ச்சியின் போது உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய். ஜெ. சரவணகுமார், சபாநாயகர் செல்வம், அசோக் பாபு, M.L.A. கல்யாணசுந்தரம், M.L.A.ராமலிங்கம் M.L.A. வெங்கடேசன் M.L.A. மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மகளிர் அணி திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.