பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல்  கல்லூரியில் பெண்கள் விடுதி புதிய கட்டிடம் திறப்பு விழா 

Loading

பண்ருட்டி, நவ.06-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் உறுப்புக் கல்லூரியில் பெண்கள்  விடுதி புதிய கட்டிடம் ரூ. 6 கோடி 49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெண்கள் விடுதி திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் பேராசிரியர் வேல்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் பேராசிரியர் ரவிக்குமார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இயக்குனர் பேராசிரியர் ஹரிஹரன் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் சக்திவேல்
ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். இதையெடுத்து விடுதியில் உள்ள அறைகளின் மின்விளக்கு, மின்விசிறி மற்றும் அலமாரிகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி தீன் முத்துக்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply