ஆரஞ்சு கலர் ஆவின் பால் பாக்கெட் விலைரூ 60 : அமைச்சர் நாசர் அறிவிப்பு

Loading

சென்னை, அக்- 5

ஆரஞ்சு நிற ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு  ரூ 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆவின் பால் விலை தொடர்பாக செய்தியாளர்களை  பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து, 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால்விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால்,  ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும், தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே  உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48 ரூபாய்க்கு சில்லரையாக விற்கப்படும் நிலையில், கார்டு வைத்திருப்பவர்கள் வாங்குவதில் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், சில்லரையாக வாங்குபவர்களுக்கு மட்டுமே 60 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த ஆரஞ்சு நிற பாலை 11 லட்சம் பேர் மட்டுமே வாங்கி வருவதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.

பிற மாநிலங்களிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் விற்கப்படும் பால் விலையோடு ஒப்பிடும் போது சுமார் 10 ரூபாய் குறைவாக தமிழகத்தில் ஆவின் பாப் விற்கப்படுவதாக அமைச்சர் நாசர் விளக்கம் அளித்தார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் ஆவின் பால் விலை திட்டவட்டமாக உயர்த்தப்படாது என்றார். ஆவின் டிலைட் பால் 90 நாட்கள் வரை கெடாத வகையில் பதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர்  தெரிவித்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *