போட்டி போடும் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி

Loading

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. கட்டா குஸ்தி முதல் தோற்ற போஸ்டர் ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் தோற்ற போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் போட்டி போடுவது போன்று இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

0Shares

Leave a Reply