தியாகராய நகர் கிழக்கு பகுதி 134 வது வட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு பகுதி 134 வது வட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் ஆரியாகவுடா ரோட்டில் உள்ள ஷோபனா திருமண மண்டபத்தில் வட்டக் கழக செயலாளர் ஆர். சக்திவேல் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் சென்னை தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மயிலை சட்டமன்ற உறுப்பினர் மயிலை
த.வேலு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக இணைந்துள்ள நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என்றும் இணைந்துள்ள நிர்வாகிகளை அரவணைத்து பழைய நிர்வாகிகள் செல்ல வேண்டுமென்றும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள் மேலும் மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாத நிர்வாகிகளை கட்சின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கவும் பரிந்துரை செய்வோம் என்று கூறினார்கள் மேலும் இந்நிகழ்வில்
மேற்கு பகுதி செயலாளர் கே ஏழுமலை மாவட்ட அவைத் தலைவர் ஆ.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் இறுதியாக 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு நலத்திட்டங்களும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது…