தருமபுரி மாவட்டத்தின் சமூக சேவகர், காமராஜர் அடிப்பொடி தகடூர் இரா.வேணுகோபால் ஐயா Ex. MC அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

Loading

தருமபுரி மாவட்டத்தின் சமூக சேவகர், காமராஜர் அடிப்பொடி தகடூர் இரா.வேணுகோபால் ஐயா Ex. MC அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு*
      Oct 27 – தருமபுரி மாவட்டத்தில் கண்ணதாசன் நற்பணி மன்றம், அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம், காமராஜர் முதல்வன் விருது, பாரத மாதா ஆன்மீக சேவை மையம், பாரத மாதா மக்கள் சிந்தனைக் குழு, கம்பன் கழகம், குறள் நெறிப் பேரவை, பாரதி முத்தமிழ் மன்றம், தருமபுரி தமிழ் சங்கம் என பல்வேறு முக்கிய சமூக அமைப்புகள் மற்றும் இலக்கிய அமைப்புகளின் பிரதான நிர்வாகியும், தருமபுரி மாவட்டத்தின் மூத்த சமூக சேவகரும், தருமபுரி நகர் பகுதியில் பாரத மாதாவிற்கென்று தனி மணிமண்டபத்தினை ஏற்படுத்தி அதில் காந்திஜி நேருஜி மற்றும் பாரதமாதா சிலைகளை நிறுவியவருமான ஆன்மீக செம்மல் தகடூர் திரு. இரா.வேணு கோபால் ஐயா Ex.MC அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளானது தருமபுரி SV ரோட்டில் அமைந்துள்ள பாரதமாதா மணிமண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.
          இந்நிகழ்வில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் தகடூர் வேணுகோபால் ஐயா அவர்களின் புதல்வர் வெங்கடேஷ், பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களான புலவர் பரமசிவம், அர்த்தனாரி மற்றும் கலைமகள் பள்ளி தாளாளர் நட்ராஜ், ஆசிரியர் சௌந்திர பாண்டியன், வினோத் நரசிம்மன், பொறியாளர் தகடூர் பிறைசூடன், இரத்தினம்,சோழ பாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வை பாரத மாதா மக்கள் சிந்தனைக் குழுவினர் ஒருங்கிணத்து நடத்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *