அரசு மருத்துவமனை “தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்” !
ஈரோடு அக்டோபர் 30
ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் “QMPS” நிர்வாகப் பணியாளர்கள் எல்.பி. எஃப்., சங்கத்துடன் இணைந்து அரசு மருத்துவமனை முகப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களாக”QMPS” நிறுவன பணியாளர்கள் சுமார் 130 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர் இவர்கள் உடை மாற்றுவதற்கும், உணவு வேளையில் உணவு அருந்துவதற்கும் நிரந்தரமாக ஒரு அறை இல்லை, ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள தொகை நாள் ஒன்றுக்கு ரூ 707 என கணக்கிடப்பட்டு அந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்படாததாலும் ரூ 280 தின கூலியாக வழங்கப்படுவதாகவும் எங்களது ஊதியத்தை யார் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற விளக்கத்தை மேலதிகாரிகளுக்கு மேற்கோள் காட்ட வலியுறுத்தியும், மேலும் தங்களுக்கு பண்டிகை நாட்களில் போனஸ் வழங்கப்படாமல் இருந்ததாலும் ,மாத விடுமுறை வார விடுமுறை என ஊழியர்களுக்கு எந்தவித விடுமுறையும் வழங்கப்படாததை கண்டித்தும் ,அரசு செவிலியர்கள் பணிகளை தூய்மை பணியாளர்களிடம் பணி செய்ய கோறுவது , தூய்மை பணியாளர்கள் மாத ஊதியத்தில் இஎஸ்ஐ பிடித்தும் அவர்களுக்கு கிடைக்க பெறாமல் உள்ளதை கண்டித்தும் ,மூன்று நபர்கள் செய்யும் பணியை ஒருவரை மட்டுமே பணி அமர்த்தி வேலைப்பளுவை திணித்து பணி செய்வதை கண்டித்தும், எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி அமர்த்தினால் மிகை நேர இரட்டிப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தியும் , தேசிய மற்றும் பண்டிகை விடுப்பு நாட்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்காமல் நிலுவையில் விடுவதை கணக்கிட்டு வழங்கிடவும், தூய்மை பணியாளர்களுக்கு முறையாக இலவச சீருடை பாதுகாப்பு உடைகள் வழங்கிடவும், உட்பட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி .எஃப்., அமைப்பினருடன் சேர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.