கரும்பு விவசாயிகள் போராட்டம்.! “கரும்பு ஆலையை மாற்றி தர ” ஆட்சியரிடம் மனு..!
ஈரோடு அக்டோபர் 29
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கரும்பு விவசாயிகள் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அரச்சலூர் கரும்பு விவசாயிகள் தங்களது கோரிக்கையை ஏற்க மறுத்த சர்க்கரை துறை அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈ ஐ டி பாரி புகழூர் சர்க்கரை ஆலை மூலமாக அரச்சலூர் பகுதி விவசாயிகள் பயன்பெற மீண்டும் எங்களுக்கு இதே ஆலையில் கரும்பு பதிவு செய்திட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார் தங்களது மனுவில் தெரிவித்துள்ளதாவது… சக்கரைத்துறை ஆணையர் ஈ ஐ டி பாரி புகழூர் சக்கரை ஆலை அரச்சலூர் பகுதி விவசாயிகள் விருப்பத்திற்கு மாறாக சக்தி சர்க்கரை ஆலை உடன் இணைத்திருப்பது சம்பந்தமாக அரச்சலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் நாங்கள் 30 ஆண்டு காலமாக புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்து அனுப்பி வருகிறோம்.
ஈ ஐ டி பாரி புகலூர் சர்க்கரை ஆலை ஆனது கரும்பு வெட்டியவுடன் கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின்படி 15 நாட்களுக்குள் பணத்தை முறையாக வழங்கி வருகிறார்கள் கடந்த 30 ஆண்டு காலமாக அனுபவத்தில் ஒரு முறை கூட பாரி சக்கரை ஆலை விவசாயிகள் பணம் நிலவை இல்லாமல் பணம் பட்டுவாடா செய்து வருகிறார்கள்.
இ ஐ டி சக்கரை ஆலை நிர்வாகம் கரும்பு பயிர் செய்வதற்காக அனைத்து உதவிகளும் முறையாக எங்களுக்கு செய்து வருகிறார்கள் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அரச்சலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக சத்திய சக்கரை ஆலையோடு இணைந்து சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணையர் ஆணையிட்டுள்ளார்கள்.
சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கணக்கில் விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் விவசாயிகள் கரும்பு பயிரிலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக இருந்து உள்ளார்கள் என்பது எல்லாரும் அறிந்த விஷயமே தற்போது விவசாயிகள் விருப்பத்திற்கு மாறாக சக்தி சர்க்கரை ஆலை பகுதியில் தான் இந்த பகுதி இணைக்கப்படும் என்று ஆணையர் ஆணை இடுகிறார்கள்.
சர்க்கரை துறை ஆணையர் தலையீடு சக்தி சர்க்கரை ஆலையில் நிலுவை தொகை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு முறை கூட எந்த முயற்சியை எடுக்கப்படவில்லை விவசாயிகள் அழைத்து பேசியதில் காலகாலமாக ஒரு ஆலையோடு பின்னிப்பிணைந்துள்ள விவசாயிகள் கருத்தையே கேட்காமல் தன்னிச்சையாக நிர்வாகம் இன்னொரு சர்க்கரை ஆலைக்கு மாற்றுவது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவே தாங்கள் தயவு கூர்ந்து இந்த பிரச்சினையில் இருந்து எங்களை விடுவித்து நாங்கள் எப்போதும் போல ஈ ஐ டி பாரி புகழூர் சக்கரை ஆலையோடு இணைந்திருக்க பரிந்துரை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று மனு அளித்துள்ளனர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் திமுக அரசு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் மட்டுமே தீர்வு ஏற்படும் என அரசலூர் கரும்பு விவசாயிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.