வேலூர் கோட்டையில் வாக்கிங் செல்பவர்களுக்கு வசதிக்காக 50 கிரானைட் இருக்கைகள்.
வேலூர் அக்டோபர் 28
வேலூர் மாவட்டம் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழமை மாறாமல் அழகு படுத்தப்பட்டு வரும் கோட்டையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானுர் வாக்கிங் செல்கின்றனர் ஆனால் கோட்டையில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்பவர்கள் அமர்வதற்கு ஏதுவான இருக்கைகள் எதுவும் இல்லை இந்த நிலையில் கோட்டையில் நடை பயிற்சி செல்லும் மைதானத்தை சுற்றிலும் இருக்கைகள் அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இந்நிலையில் கோட்டையில் வாக்கிங் செல்லும் பொதுமக்கள் அமர்ந்து செல்லும் வகையில் 50 இருக்கைகள் அமைக்கப்படுகிறது .
இது தொடர்பாக மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, ஆணையர் அசோக் குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கோட்டை ஊர்வலத்தில் வாக்கிங் செல்லும் சுற்றுப்பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து மாநகராட்சி மேயர் கூறுகையில் கோட்டை உள்வளகத்தில் வாக்கிங் செய்பவர்களுக்கு அமர்ந்து செல்லவாரு இருக்கையில் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இதனை தொடர்ந்து இங்கு சுற்றுலா வந்து செல்லும் பயணிகள் மற்றும் வாக்கிங் செல்லும் பொதுமக்கள் அமரும் வகையில் 50 இருக்கைகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் கூறினார்.