திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் நகைக்கடன் வழங்கும் பிரிவில் நகைக்கடன் ஆவணங்கள்,கணினி, மின் விசிறி ஆகியவை தீயில் கருகின
திருவள்ளூர் அக் 26 :
திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உள்லது இந்தியன் வங்கி. இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்தியன் வங்கி வழியாக நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த போது வங்கியிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல்தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் அளித்த தகவலையடுத்து திருவள்ளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் நிகழ்விடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர். எனினும்,நகைக்கடன் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகைக்கடன் ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாயின.
மேலும் கணினி, மின் விசிறிகளும் தீயில் எரிந்தன. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக திருவள்ளூர் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.