சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் அக் 26 :
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov. in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NளுP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி; உதவித்தொகை திட்டத்திற்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.