திருவள்ளூரில் மதிமுக நிறுவனர் வைகோவின் ஆவண படத்தினை மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ திருவள்ளூர் ராக்கி திரையரங்கில் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் அக் : மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை குறித்த வரலாற்றினை குறிக்கும் வகையிலான மாமனிதன் வைகோ தி ரியல் ஹீரோ என்ற ஆவண படத்தினை மதிமுக தலைமைக் கழக செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ திருவள்ளூரில் உள்ள ராக்கி திரையரங்கில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பூவை மு.பாபு, வழக்கறிஞர் இரா.அருணாச்சலம், அட்கோ மணி கனல் காசிநாதன், வழக்கறிஞர் கே.எம்.வேலு, இரா.மணியாரசு, எஸ்.ஆர்.மகேஷ் பாபு கைலாசம் உள்பட நிர்வாகிகள் கூட்டணிக் கட்சிளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக திரண்டு தமிழகத்தில் மதிமுக கட்சியின் நிறுவனர் வைகோவின் ஆவண படத்தை பார்க்க வருகை புரிந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக தலைவர் வைகோவின் அனைத்து சாதனைகள், அனைத்து செயல்பாடுகளையும் ஆவணப்படுத்தி வைத்துக் கொள்ள முடியாது, சராசரி ஒரு அரசியல்வாதி செய்ய முடியாததை ஒரு மாமனிதரால் செய்ய முடியும். அதை முடிந்தவரை ஆவணப்படுத்தியிருக்கிறோம் எனறா
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மரணம் மற்றும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை குறித்த மதிமுகவின் நிலைப்பாடு குறித்துசெய்தியாளர்கள் கேட்டதற்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜாலியன் வாலாபாத் படுகொலையை ஒப்பிட்டு தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்றும், அப்பாவி தமிழர்கள் 13 பேர் அன்றைய அதிமுக அரசு ஆட்சி செய்த போது சுட்டுக் கொல்லப்பட்னர். அதற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் , காவல்துறை ஐஜி 17 அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதை மதிமுக சார்பில் வரவேற்கிறோம் என்றார்.
எதிர் காலத்தில் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதற்காக தலைவர் வைகோ இதை வரவேற்றிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையும் இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் 4 பேர் மீது விசாரணை வைகக் வேண்டும் முடியும் போது அது போன்ற தவறு நடந்திருக்கிறதா அது தான் காரணமா என்பது தெரியவரும் என்றார். மேலும் கட்சியை வளர்க்க சுற்றுப்பயணம் செய்து வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வளர்ச்சிக்கு தேவை என்ன என்பது குறித்து கேட்டறிந்து செயல்பட்டு வருவதாகவும்.தெரிவித்தார்.